இலங்கை முன்னோக்கி செல்வதற்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், வெறுப்பைப் பரப்புவதிலும் வன்முறையைத் தூண்டுவதிலும் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், அதே நேரத்தில் தனியார் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.