Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ முன்னாயத்த கூட்டம்


நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்  சிறப்பாக நடைபெறக்கூடியவாறு  ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார் .

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 29ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் மஹோற்சவம் இடம்பெறவுள்ளது. 

அந்நிலையில், நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பிலான முன்னாயத்த கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அதன் போது,  திருவிழாவுக்கு தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள், படகு மற்றும் தரை போக்குவரத்து  சுகாதார நடைமுறைகள், உணவு, குடிநீர், மின்சார விநியோகம் மற்றும் வீதி திருத்தம் , போன்ற மிக அத்தியாவசியமான தேவைகள் தொடர்பில் மிக ஆராயப்பட்டது. 

அது தொடர்பில் மாவட்ட செயலர் தெரிவிக்கையில், 

அந்த வேலைகளுக்கு பொறுப்பான திணைக்களம் மற்றும்  பிரதேச சபையினர் அதற்குரிய பொறுப்புகளை ஏற்று முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளேன்.

கடல் போக்குவரத்து காலை 6 தொடக்கம் மாலை 6 மணி வரை இடம்பெறக்கூடிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டவுள்ளது 

 அதேபோல 12ம் திருவிழாக்கு பின்னர் இரவு 9 மணி வரை கடல் போக்குவரத்தினைபடுத்தி தருமாறு கோரப்பட்டது.  அதே போல தரை  போக்குவரத்தும் அவ்வாறே மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்,

எனவே இதனுடைய விவரங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவதாக தீர்மானித்துள்ளோம்,

 குறிப்பாக பொலீத்தின் பாவனையை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளோம்,

நயினாதீவு ஆலய பிரதேசம் புனித பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதால்  மது அருந்துதல், மாமிசங்களை விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆகவே பக்தர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் அதே போல  படகு போக்குவரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை படகுகளும் தங்களுக்குரிய தகுதிச் சான்றிதழைப் பெற்ற பின்னரே சேவையில் ஈடுபட முடியும்,

அத்தோடு படகில் பயணிப்பவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அங்கிகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.

 அத்தோடு பாதுகாப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை இலங்கை பொலிசார் மற்றும் கடற்படையினரும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்,

அத்தோடு மிக முக்கியமாக ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் தங்களுடைய பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை பாதுகாப்பாக பேணவேண்டும்.

 ஏனெனில் தற்போதைய நெருக்கடி நிலையில் திருட்டுச் சம்பவங்கள் இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன

அத்தோடு கடல் பயணம் மற்றும் தரை பயணங்களின் போது சிறுவர்கள் மற்றும் வயது குறைந்தவர்கள் முதியவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் தாங்களாகவே முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்,

No comments