யாழ்ப்பாணம் வடமராச்சி, புலோலியில் விவசாயத்துக்கு தேவையான உள்ளீடுகள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புலோலி கமநலசேவை நிலையத்துக்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றுகூடிய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேரணியாக பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்றனர்.
பேரணியின் நிறைவில் மாவட்ட செயலருக்கான மகஜர் பருத்தித்துறை பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது.
No comments