சர்வதேச கணக்கியல் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் நடைபெற்றது.
இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (CA SriLanka) அனுசரணையுடன் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் கணக்கியல் துறையினால் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் அவுஸ்ரேலியாவின் ரெல்ஸரா கூட்டு நிறுவனத்ததின் குழுப் பொது முகாமையாளரும் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவன உறுப்பினருமான பிரபாஸ் கலகெதர “செயற்கை நுண்ணறிவும், கணக்கியலின் எதிர்காலமும்” என்ற தலைப்பில் நிகழ்நிலை வாயிலாகத் திறவுரையாற்றினார்.
தொடர்ந்து முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற விவாத நிகழ்வுக்கு முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ரி. வேல்நம்பி நடுவராகப் பங்குபற்றினார்.
இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பணியாளர்கள், மாணவர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்




.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


No comments