கதிர்காமத்தில் இருந்து யாத்திரிகர்களுடன் கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது..
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ இடையே 88 ஆவது கிலோமீற்றருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 100 மீற்றர் தூரம் பயணித்து அருகில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தில் காயாமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments