Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

திருக்கேதீஸ்வரத்தில் மோட்டார் சைக்கிளுக்கு 150 , தலைக்கவசத்திற்கு 60 ரூபாய் அறவீடு!


மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வாகன தரிப்பிடத்தில் மோட்டார் சைக்கிளுக்கு 150 ரூபாயும் , தலைக்கவசத்திற்கு 60 ரூபாயும் அறவிடப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். 

சிவராத்திரி விரத தினமான இன்றைய தினம் சனிக்கிழமை வரலாற்று சிறப்பு மிக்க திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. 

அதனை காண்பதற்காக இலங்கையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்தனர். 

அதன் போது அங்குள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் மோட்டார் சைக்கிளுக்கு 150 ரூபாயும் , தலைக்கவசம் ஒன்றிற்கு 60 ரூபாயும் அறவிட்டு அதற்கான பற்றுச்சீட்டுக்களையும் வழங்கி வருகின்றனர். 

வாகன தரிப்பிட கட்டணங்கள் அப்பகுதி உள்ளூராட்சி சபைகளில் அனுமதியுடனையே அறவிட முடியும். அந்நிலையில் மன்னார் நகர சபை இதற்கு அனுமதி வழங்கி இருக்க வேண்டும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாகன தரிப்பட கட்டணத்தினை இவ்வளவு பெரிய தொகையாக நிர்ணயித்தமைக்கு பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். 

No comments