பளையில் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பியகம மதுவரி திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் உடைமையில் இருந்து 2 கிலோ 250 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கஞ்சா கடத்த மோட்டார் சைக்கிளில் கொடுத்தார் எனும் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைதாகி நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது சகோதரனான பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments