இலங்கை அரசியல் சங்கத்தினர் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
சம்பள அதிகரிப்பை வழங்க கோரியும், வரி அறவீட்டினை நிறுத்த கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளை தாங்கியவாறு 20000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்தை வழங்க வேண்டும்., மாணவர்களின் போதனை குறைபாட்டை நிவர்த்தி செய்!, பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை கொடு உள்ளிட்ட பல்வேறு பதாகைகளை தாங்கியவாறு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
No comments