Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யூடியூப் பார்த்து கர்ப்பத்தை கலைக்க முயன்ற மாணவி உயிரிழப்பு


யூடியூப் வீடியோ பார்த்தபடி கருக்கலைப்பு செய்த மாணவி உயிரிழந்துள்ளார். 

இந்தியா நெல்லூர் மாவட்டம், மரிபாடு மண்டலத்தை சேர்ந்த 19 வயதான தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக்., 2-ம் ஆண்டு மாணவியே உயிரிழந்துள்ளார். 

கல்லூரிக்கு வந்த மாணவி , சக மாணவிகள் வகுப்பறையில் இல்லாத நேரம் , வகுப்பறை கதவினை பூட்டி விட்டு , யூடியூப் வீடியோ பார்த்தபடி கருக்கலைப்பு செய்துள்ளார். 

அதனால் அதிக இரத்த போக்கு ஏற்பட்ட நிலையில் , ஆறு மாத சிசு ஒன்றும் அருகில் கிடந்த நிலையில் சக மாணவிகளால் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

அது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மாணவிக்கும் , கார் ஓட்டுநர் ஒருவருக்கும் இடையில் உறவு இருந்ததாகவும் , அதனூடாகவே மாணவி கர்ப்பமடைந்துள்ளார் என்றும் , தனது கர்ப்பத்தை யூடியூப் வீடியோ பார்த்தபடி கலைக்க முற்பட்ட போதே அதிக இரத்த போக்கு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக தெரிய வந்துள்ளது.

No comments