புதுவருடத்தின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் ,
கட்சித்தாவல் இடம்பெறவுள்ளதை எங்களால் மறுக்க முடியாது, ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் செல்வார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன எப்போதும் கட்சிதாவும் நோக்கத்துடனேயே உள்ளார்.
அமைச்சு பொறுப்பை ஏற்பது குறித்தும் ஆர்வமாக உள்ளார். ராஜித எப்போதும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் காணப்படுகின்றார்.
மேலும் கட்சிதாவுவது அவருக்கு பெரிய விடயமல்ல என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
No comments