Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

O/L மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு


தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கு  நடாத்தப்படவுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு பொறுப்பாளர் வரதராஜன் பார்த்தீபன் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்குடன் யாழ். இந்துக் கல்லூரி கணித ஆசிரியர் அமரர் செல்லையா தவராஜா அவர்களின் ஞாபகார்த்தமாகதமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு இலவசக் கல்வி கருத்தரங்கு ஒன்றினை நடாத்தவுள்ளது.

குறித்த கருத்தரங்கானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(21) காலை 8.30 மணிக்கு சித்தங்கேணிச் சந்தியிலுள்ள மகா கணபதி மண்டபத்திலும், மறுநாள் திங்கட்கிழமை (22)காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகிலுள்ள DCM கல்வி நிலையத்திலும் நடைபெறவுள்ளது.

கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களைக் கொண்டதாக இக் கருத்தரங்கு அமையவுள்ளது.

இக் கருத்தரங்கில் பங்கு பற்றும் மாணவர்களுக்கு கொழும்பு பிரபல பாடசாலைகளின் வினாத்தாளுடன்கூடிய கையேடுகள் மற்றும் கருத்தரங்கில் பங்குபற்றுவதற்குத் தேவையான எழுதுகருவிப் பொருட்கள் என்பனவழங்கப்படவுள்ளது.

குறித்த கருத்தரங்கில் பங்கு பற்ற விரும்பும் மாணவர்கள் தங்களின் பெயர் மற்றும் பாடசாலையின் விபரங்களை 075 024 2472 என்னும் இலக்கத்திற்கு அனுப்பி பதிவுகளை மேற்கொள்ளமுடியும் - என்றுள்ளது.

No comments