Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மத போதகரின் சர்ச்சைக்குரிய கருத்து! CID வலை வீச்சு!


மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் போதகர் ஒருவர் கருத்து வெளியிட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, போதகரின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய உத்தரவுக்கமைய உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.

ஜெரம் பெர்னாண்டோ என்ற கிறிஸ்தவ மத போதகர் கூறிய கருத்து தொடர்பான காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது, கருத்துக்கள் புத்தரையும் மற்ற மத நம்பிக்கைகளையும் அவமதிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுந்தன.

ஜெரம் பெர்னாண்டோ என்ற கிறிஸ்தவ மத போதகரின் இந்த கருத்துக்கு எதிராக நவ பிக்கு பெரமுன நேற்றைய தினம் திங்கட்கிழமை கோட்டை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

அதன் போது, போதகரை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments