Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அங்கஜன் கொடுத்த நீராகாரத்தை தூக்கி வீசி அட்டகாசம்


நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் போராட்டக்களத்தில் நிற்பவர்களுக்கு என வழங்கிய நீராகாரத்தை தூக்கி வீசி அநாகரிகமாக நடந்து கொண்டமை அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது. 

தையிட்டி விகாரையை அகற்ற கோரி நேற்றைய தினம் புதன்கிழமை முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ,விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு நேரில் வந்து , தனது ஆதரவை தெரிவிதத்துடன் , அங்கிருந்தவர்களுக்கு சோடா , பால் பாக்கெட் போன்ற நீராகாரங்களையும் பிஸ்கெட் வகைகளையும் வழங்கினார். 

போராட்ட  களத்தில் இருந்து அங்கஜன் வெளியேறியதும் , அவர்கள் கொடுத்தவை அருகில் உள்ள வேலி ஓரம் வீசப்பட்டு இருந்தது. 

அதனை அவதானித்த அங்கிருந்தவர்கள் , நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் காணப்படும் நிலையில் , எவ்வளவோ பேர் உணவுக்காக ஏங்கி நிற்கும் நிலமை காணப்படுகின்ற இந்த கால பகுதியில் உணவு பொருட்களை வீசி எறிந்து அநாகரிகமாக செயற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்க எந்த அருகதையும் அற்றவர்கள் என பலரும் கவலை தேய்ந்த குரலுடன் விசனம் தெரிவித்தனர். 

அதேவேளை போராட்ட களத்திற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற மக்கள் பிரதிநிதிகளை அங்கு நின்ற சிலர் அநாகரிகமாக பேசியும் , அநாகரிகமாக அவர்கள் தொடர்பில் குரல் எழுப்பியும் குழப்பங்களை உண்டு பண்ணும் விதமாக செயற்பட்டமை தொடர்பிலும் பல மக்கள் பிரதிநிதிகள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர். 

நினைவேந்தல் நிகழ்வுகள் மாத்திரமல்ல தமது போராட்டங்களுக்கு கூட ஏனைய அரசியல்வாதிகள் , மக்கள் பிரதிநிதிகள் வர கூடாது என செயற்படுவது ஒரு அரசியல் நாகரீகமற்ற தன்மை என அரசியல்வாதிகள் பலரும் சலிப்புடன் சொல்லி போராட்ட களத்தில் இருந்து வெளியேறி சென்றமையும் குறிப்பிடத்தக்கது. 






No comments