Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கதிர்காம பாதயாத்திரையில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் உயிரிழப்பு!


அம்பாறை பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்துக்கு காட்டு வழியாக பாதை யாத்திரை சென்ற ஆண் யாத்திரிகர் ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். 

தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த லிங்கசாமி கேதீஸ்வரன் (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது நேத்திக்கடனை முடிப்பதற்காக உகந்த முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கான பாதயாத்திரையை ஆரம்பித்து சென்று கொண்டிருந்த நிலையில் சம்பவ தினமான நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் குமுக்கன் வனப்பூங்கா இந்து கோவில் பகுதியில் காலில் பாம்பு ஒன்று தீண்டியதையடுத்து மயக்கமடைந்துள்ளர்.

இதனையடுத்து அந்த பகுதியில் முகாமிட்டு மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வண்டியில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் வழியில் உயிரிழந்த நிலையில் வைத்திய சாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோலில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை இரு தினங்களுக்கு முன்னர் கதிர்காம காட்டுவழி பாதயாத்திரையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

No comments