Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிடுவதற்கும், தேசிய பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம் ?


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை  பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடுவதற்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் என்ன சம்மந்தம் உள்ளது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்  கேள்வி எழுப்பியுள்ளார்.

  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் ஒருவரினால் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தேசிய பாதுகாப்பு விடயம் என கூறி பதிலளிக்க நாட்டின் பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தலைமையகம் மறுப்பு தெரிவித்தது.  

அது தொடர்பில் சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில், 

தமிழ் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட பின்னர், உயிரிழந்தது அவர் தான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவரின் உடலை தாங்கள் மரபணுப் பரிசோதனை செய்து உறுதிப்படுத்தினோம் என்று யுத்தம் முடிந்த ஒரிரு நாட்களில் அரசாங்கம் அறிவித்திருந்தது,

2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் மரபணுப்பரிசோதனை செய்து கொள்வதற்கான வசதிகள் இருந்திருக்கவில்லை. இந்தியாவின் ஐதராபாத்திலும், சிங்கப்பூர் போன்ற இடங்களில்தான் அந்த வசதி இருந்தாக நாங்கள் அறிந்து கொண்டோம்.

ஆகவே யுத்தம் முடிந்த ஒரிரு நாட்களில் மரபணுப்பரிசோதனை செய்ததாக பொய்யான தகவலை அரசாங்கம் வெளியிட்டிருந்தது.  

பிரபாகரனின் மாதிரிகளை நாங்கள் எடுத்து வைத்திருந்தோம், அதை அவருடைய தந்தை அல்லது தாயாரின் மாதிரிகளுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்தினோம் என்று செல்வதற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் குந்தகம் என்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது.

அரசாங்கம் பச்சைப் பெய்யை சொல்லுகின்றது. ஓரு பிரேத பரிசோதனை நடத்தப்படவேண்டும் என்றால், சட்டவைத்திய அதிகாரி முன்னால்தான் நடத்த்ப்பட வேண்டும். ஆனால் அவ்வாறான ஒன்று நடந்ததாக அரசாங்கம் இதுவரை கூறவில்லை.

அதைவிட ஒரு நீதிபதி முன்னால்தான் மரண விசாரணை நடைபெறவேண்டும். நீதிபதிதான் பிரேத பரிசோதனை நடத்துவதற்கான உத்தரவை வழங்க வேண்டும். அவ்வாறான எதுவும் இங்கு நடக்கவில்லை.

கருணாவையும், தயா மாஸ்டரையும் கொண்டு சென்று காட்டியவர்களுக்கு, ஒரு நீதிபதியையும் அல்லது ஒரு சட்டவைத்திய அதிகாரியையும், உலங்கு வானூர்தி மூலம் அழைத்துச் செல்வதற்கு அரசாங்கத்திற்கு என்ன தடை இருந்தது.

அரசாங்கம் தொடர்ந்தும் பொய்யையும், பித்தலாட்டமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைவே பெய்மையாமக்குகின்றது. தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புச் செய்வது உட்பட அரசாங்கம் நினைத்தவற்றை செய்வதற்கு தேசிய பாதுகாப்பு என்ற வார்த்தையை பயன்படுத்துவது போல, பிரபாகரனின் விடயத்தையும் மூடி மறைப்பதற்காக திட்டமிட்டு தேசிய பாதுகாப்பு என்பதை, நாட்டின் பாதுகாப்பு துறையும், படைத்துறையும் பயன்படுத்தியுள்ளது என்பதே உண்மை என்றார்.  

No comments