Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தாயக உறவுகளுக்கான "EKuruvi Steps 2023"


"EKuruvi Steps 2023" நிகழ்வின் மூலம் , தாயகத்தில் உள்ள சிறு முயற்சியாளர்களினை விருத்தி செய்யும் நோக்கில் "பெறுமதி_கூட்டுதல்_Value_Addition"  தொனிப்பொருளில் நிகழ்வுகளும் ஊக்குவிப்புக்களும்  நடாத்தப்படவுள்ளது.

எதிர்வரும் ஜூன் 25 ம் திகதி காலை 9:00 மணிக்கு தமிழிசை கலாமன்றம் 1120 Tapscott Rd #3, Scarborough  ல் நடைபெறும் நிகழ்விற்கு  கனடாவில் வசிக்கும்  அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

கனடா வில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் நவஜீவன் அனந்தராஜ் அவர்களினால் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்ச்சியே E Kuruvi Steps ஆகும். 

இந்த நிகழ்வின் மூலம் மக்களுக்கிடையில் நடைப்பயிற்சியின் அவசியத்தினை உணர்த்தி 60 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 10,000 காலடிகள் என்று இலக்கு கண்காணிக்கப்பட்டு ஊக்கமளிக்கப்பட்டு தொடர்ந்து நடந்து உங்கள் மனம் ,உடல் அரோக்கியதை மேம்பெடுத்துவது மட்டுமல்லாது, சமூகத்தையும் புத்துணர்ச்சியுடன் கொண்டு செல்லும் ஒரு நிகழ்வாகும்.

covid -19 முடக்க காலத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் இந்த நிகழ்வு கனேடிய தமிழர்களின் உடல் உள ஆரோக்கியத்தை மையப்படுத்தி அமைந்தாலும் , இலங்கையிலும் புதிய வெளிச்சத்தினால் மேற்கொள்ளப்படும் சமூகம் சார்ந்த பல விழிப்புணர்வு நிகழ்வுகளை மையப்படுத்தி அமைந்துள்ளது.

சென்ற வருடம் புதிய வெளிச்சம் எனும் நிகழ்வின் மூலம் "தற்சார்பு" எனும் தொனியில்  இயற்கை விவசாயத்தினை முன்னிலைப்படுத்தி  இலங்கையில் பல தேசங்களிலும் பயிற்சி பட்டறைகள்  நடாத்தப்பட்டு, மாணவர்களுக்கிடையில் இயற்கை விவசாயத்தினை உட் புகுத்தும்விதமாக விவசாயம் சார் நிகழ்வுகளும் பல நடாத்தப்பட்டது .

இவ் வருடமும் "EKuruvi Steps 2023" நிகழ்வின் மூலம் , தாயகத்தில் உள்ள சிறு முயற்சியாளர்களினை விருத்தி செய்யும் நோக்கில் "பெறுமதி_கூட்டுதல்_Value_Addition"  தொனிப்பொருளில் நிகழ்வுகளும் ஊக்குவிப்புக்களும்  நடாத்தப்படவுள்ளது.

நாடுகடந்த தேசங்களில் எம்மவரினால் மேற்கொள்ளும் இந்த நிகழ்விற்கு நாம் ஆதரவினை வழங்கவேண்டியது எமது கடைமையே ஆகும் என தெரிவித்தனர்.







No comments