கிழக்கு மாகாணத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகரை, ஏறாவூர், மற்றும் கந்தளாய் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிவரும் உத்தியோகஸ்தர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது, சக பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கியமை, இளைஞர் ஒருவரை அச்சுறுத்தி பணம் பறித்தமை, திருட்டில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஐவரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, நீதிமன்றினால் , பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஐவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
No comments