Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, May 24

Pages

Breaking News

யாழில். கொரியர் பணத்தை வழங்காது , ஊழியரை தாக்கியவர் விளக்கமறியலில்


கொரியரை வாங்கி விட்டு , பணம் கொடுக்காது , கொரியர் வழங்க சென்ற ஊழியரை வீட்டுக்குள் அழைத்து சென்று தாக்கிய நபரை இளவாலை பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , மன்று அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வீடொன்றின் விலாசத்திற்கு வந்த கொரியரை , கொரியர் நிறுவன ஊழியர் வழங்க சென்று இருந்தார். அவரிடம் கொரியரை பெற்றுக்கொண்ட நபர் அதற்கு உரிய பணத்தினை வழங்கவில்லை. அதனை கேட்ட ஊழியரை, தனது வீட்டுக்குள் அழைத்து சென்று ஊழியரை சரமாரியாக தாக்கி விட்டு , ஊழியரை துரத்தி உள்ளார் 

அதனை அடுத்து , தாக்குதலுக்கு இலக்கான ஊழியர் அது தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து , தாக்குதலாளியை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். 

மன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. 

பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் - தடுக்க சென்ற அரச உத்தி...

யாழில். 270 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

துப்பாக்கி ரவைகள் சீருடைகள் மீட்பு - இருவர் கைது

"இலங்கைக்கான பாடங்கள்" - சீன நாட்டு பேராசிரியர் யாழில் சிறப்...

புங்குடுதீவு கண்ணகி அம்மனுக்கு சேர்ந்த கோடிக்கணக்கான ரூபாய்க...

இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா

சிலாபத்தில் 18 மில்லியன் ரூபாய் பணத்துடன் 08 பேர் கைது

எம்மை சிறைக்கு அனுப்புவதால் மக்கள் பிரச்சினை தீராது!

எனது தலைவர் ரோஹணவிற்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட கேட்கவி...