தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல் இன்றையதினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் தொடர்சியான நினைவேந்தல் தினமும் காலை 9மணி முதல் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இன்று காலை மாவீரர் ஒருவரின் தாயார் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.
நினைவுத் தூபிக்கு அருகில் அடையாள உண்ணாவிரதம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
குறித்த பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர், புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
No comments