Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஊர்காவற்துறையில் வணிகர்களை சந்தித்த BB அணியினர்


உள்ளூர் வணிகர்களுக்கு கரம் கொடுக்கும் Business Board நிறுவனமானது தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஊர்காவற்துறை  பிரதேசத்தில் வாழும் உற்பத்தியாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களை நடத்துபவர்களோடு சந்திப்பினை மேற்கொண்டது. 

ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி அவர்களின் தலைமையில், குறித்த சந்திப்பு நேற்றைய தினம் திங்கட்கிழமை  நடைபெற்றது.  இதில் சுமார் 40  வணிக முயற்சியாளர்கள் கலந்துகொண்டதுடன் பிரதேச செயலக ஊழியர்களும் கலந்துகொண்டனர். 

சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் , தங்களது வணிகத்தினை எவ்வாறு BusinessBoard தளத்தில் பதிவு செய்வது என்பதோடு மட்டுமல்லாது Google Map மற்றும் சமூக ஊடகங்களில் தமது உற்பத்திகளை விளம்பரப்படுத்துவதற்கான உத்திகளையும் ஆர்வமாக கேட்டு அறிந்துகொண்டனர். 

BB நிறுவனமானது கடந்த 6 மாத காலத்தில் வடக்கில் சுமார்  10 ஆயிரம் வணிகநிறுவனங்களை Google Map மற்றும் BB தளத்திலும் இலவசமாக பதிவுசெய்துள்ளதோடு வடக்கு மற்றும் கிழக்கில் சுமார் 15 ஆயிரம் வணிக நிறுவனங்களை பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வணிக வளர்ச்சிக்காக கிராமங்களில் உள்ள சிறு வணிகங்கள் முதல் அனைத்து வியாபார நிலையங்களையும் இலவசமாக பதிவேற்றம் செய்யும் BusinessBoard அணியினருடன்  இணைந்து கொள்ளுமாறு BB அணியினர் கோரியுள்ளனர். 







No comments