Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, May 25

Pages

Breaking News

யாழில். தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு தடை கோரி மீண்டும் மனு தாக்கல்


தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது 

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்க கோரி ,கொழும்பில் இருந்து ஹெலி மூலம் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதானிகள் மனுவை தாக்கல் செய்துள்ளனர். 

மனு மீதான விசாரணைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதனை தொடர்ந்து நீதிமன்று இன்றைய தினமே கட்டளை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

யாழ்ப்பாணத்தில் நினைவேந்தலுக்கு தடை கோரி, யாழ்ப்பாண பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று முன்தினம் புதன்கிழமை நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை கொழும்பில் இருந்து வந்த குழுவினால் மீள மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த விசேட குழுவில் பொலிஸ் சட்டப்பிரிவு பணிப்பாளர் காளிங்க ஜெயசிங்க , சிரேஷ்ட அரச சட்டவாதி சமிந்த விக்கிரம உள்ளிட்டவர் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நல்லூர் கொடியேற்றம் ஜூலை 29ஆம் திகதி - இம்முறை மேற்கு வாசலில...

நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்ஷக்கள் எமக்கு அறிவுரை கூறத...

பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும்

வடக்கில் மாணவர்கள் சைவச் சின்னங்கள்அணிந்து செல்ல தடை ?

ஆலய சுற்றாடல்களை புனித பிரதேசமாக அறிவித்து வர்த்தமானி வெளியி...

யாழ். பல்கலையில் நடைபவனி

தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு ஆட்சியில் இருக்காது

யாழில். அனுமதி பத்திரம் இன்றி மணலுடன் பயணித்த டிப்பர்கள் மட...

நிலங்களை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை

காணி சுவீகரிப்புக்கு எதிராக சட்டத்தரணிகள் குழாமுடன் களமிறங்க...