Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கஜேந்திரன் எம்.பி மீதும் , தியாக தீபத்தின் வாகனம் மீதும் தாக்குதல் நடாத்தியவர்களில் ஐவர் கைது!


நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீதும் , தியாக தீபம் திலீபனின் உருவப்படத்துடன் வந்த ஊர்தியின் மீதும் தாக்குதல் நடாத்திய கும்பலில் ஐந்து பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருகோணமலை சர்தாபுர பகுதியில் நேற்றைய தினம் மாலை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீதும் , தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்தி மீதும், இலங்கை தேசிய கொடியுடன் வந்த சிங்கள காடையர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். 

சம்பவம் தொடர்பில் சீனன் குடா பொலிஸ் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் முறைப்பாடு செய்ததை அடுத்து , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட ஐவரையும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments