கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாபெரும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் இம்மாதம் 27ஆம் திகதியில் இருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதிவரை திருகோணமலை டச் பே (Dutch Bay Beach) கடற்கரையில் களியாட்ட நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செய்தியாளரகளுக்கு தெளிவூட்டும் வகையிலான் செய்தியாளர் சந்திப்பு இன்று கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியகத்தின் பணிப்பாளர் மதனவாசன்” குறித்த தினங்களில் காற்ப்பந்து போட்டிகள், கபடி போட்டிகள், மரதன் ஓட்டப்போட்டி, சிறுவர் இல்லங்களில் வாழும் சிறார்களுக்கான விசேட போட்டிகள், பட்டத்திருவிழா, உணவுத்திருவிழா, இசைக்கச்சேரிகள் போன்ற களியாட்ட நிகழ்வுகள் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளளோம், எனவே இந்நிகழ்வுகளில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் பணிப்பாளர் என்.எம் நௌபீஸ் சுற்றுலாப்பணியகத்தின் முகாமையாளர் நாயகம் ஞானசேகரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
No comments