கொழும்பின் நகரங்களை இலக்கு வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு நகரின் 7 இடங்களை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் நடாத்த திட்டமிட்டுள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் , கொழும்பு துறைமுக நகரம், கங்காராமை உள்ளிட்ட 7 இடங்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் இலக்கு வைத்துள்ளதாகவும், பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர், இந்த விடயம் தொடர்பில் அறிந்திருந்த பின்னணியில், அது தொடர்பிலான தகவல்களை கடிதமொன்றின் ஊடாக தென்னேகும்புர பொலிஸ் சோதனைச் சாவடிக்கு வீசியுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணை பிரிவு கூறியுள்ளது எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments