யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தரை கட்டி வைத்து விட்டு இரும்புகளை திருடி சென்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையில் பாதுகாப்பு, கடமையில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தரை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டி வைத்து விட்டு சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை திருடி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய வெள்ளிக்கிழமை கீரிமலை நல்லிணக்க புரம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments