Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

டிப்பர் வாகனத்தினால் யாழில். ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி உயிரிழப்பு.


ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி , டிப்பர் வாகனத்தினால் ஏற்படுத்தப்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - நீர்வேலி மேற்கைச் சேர்ந்த தனபாலசிங்கம் மகேஸ்வரி (வயது 72)  என்பவரே உயிரிழந்துள்ளார். 

நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பொங்கல் நிகழ்வில் மூதாட்டி ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, வீதியில் வேகமாக வந்த டிப்பர் வாகன , வேக கட்டுப்பாட்டை இழந்து ஆலயத்திற்கு அருகில் நின்ற வாகனத்தை மோதியதில் , அந்த வாகனம் பொங்கலில் ஈடுபட்டிருந்தவர் மீது மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில், 30 வயதான டிப்பர் சாரதியை கைது செய்துள்ள கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 





No comments