"டாக் டிக் டோஸ் " முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவரான ராஜ் சிவராஜ் இயக்கத்தில் பூவன் மதீசனின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இவர்களின் கூட்டணியில் வெளியான "புத்தி கெட்ட மனிதர்கள் எல்லாம்" திரைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. அத்துடன் வணிக ரீதியாகவும் பெரு வெற்றி பெற்று இருந்தது.
இந்நிலையில், மீண்டும் இவர்களின் கூட்டில் வெளியாகவுள்ள "டாக் டிக் டோஸ் " முழு நீள திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments