நல்லூர் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மின்கலத்தை (பற்றரி) திருடிய குற்றச்சாட்டில் காரைநகரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்த சட்டி விரத தினத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வரும் வேளையில், ஆலய வழிபாட்டிற்கு பெருமளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அவ்வாறு ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவரின் முச்சக்கர வண்டியில் இருந்து மின் கலத்தை திருடியவர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதோடு, திருடப்பட்ட மின் கலத்தையும் மீட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர் காரைநகர் பகுதி சேர்ந்தவர் எனவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு, திருட்டுகளில் ஈடுபட்டு வந்த நபர் எனவும், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments