நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் என்பது பேச்சு சுதந்திரத்தை முடக்குவதான தொன்றல்ல மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நமது நாட்டின் இறைமையை பாதிக்கின்ற விடயங்களை நெறிப்படுத்துகின்ற ஒரு சட்டமூலம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நிகழ்நிலை காப்பு ஆணைக் குழுவை ஸ்தாபிப்பது, சில தொடர்பாடல்களை தடை செய்வது, தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலை கணக்குகள் (Online Account) மற்றும் போலி நிகழ்நிலை கணக்குகளை பயன்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட சில விடயங்கள் இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் இந்த சட்டம் என்பது நாட்டின் இறையாண்மையை இழிவு படுத்தவும் கேள்வி உட்படுத்த முற்படுவோருக்கும், குறிப்பாக குறிப்பாக குறுந்தூர் மலை, வெடுக்குநாறி மலை , கின்னியா போன்ற நீதிமன்ற தீர்ப்புகளை அவமதித்த, அவமதிக்கின்ற சாராருக்கு இவ்வாறான சட்டமூலம் கட்டுப்படுத்தும் என தெரிவித்தார்.
No comments