இலங்கை தமிழரசு கட்சியினுடைய வரலாற்றிலே ஒரு ஜனநாயக ரீதியான உரையாடல் ஊடாகவும் ஜனநாயக ரீதியான செயல்முறையின் ஊடாகவும் வரலாற்றில் முக்கிய வரலாற்றை பதித்துள்ளோம்.
என்னுடன் போட்டியிட்ட எம்.ஏ.சுமந்திரன் சீ.யோகேஸ்வரன் ஜயாவும் இணைந்து கட்சியுனுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் எமது மக்களின் உரிமைக்காக தேசிய இருப்புக்காக தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோம் என தமிழரசு கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
No comments