யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தாக்கி கொள்ளையடித்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர், நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , ஆனைக்கோட்டை பகுதியில் வழிமறித்த கும்பல் ஒன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் மோட்டார் சைக்கிள் திறப்பு , தலைக்கவசம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , தாக்குதல் நடைபெற்று சில மணி நேரத்தில் தாக்குதல் மேற்கொண்டார்கள் எனும் குற்றச்சாட்டில் சவற்காடு பகுதியை சேர்ந்த ஐவர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments