ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தம்பாட்டி மற்றும் நாரந்தனை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை டெங்கு ஒழிப்பு வீட்டுத் தரிசிப்பு இடம்பெறுகின்றது.
ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர் மற்றும் பணியாளர்கள், கடற்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் கூட்டாக இணைந்து இச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது பொதுமக்களின் வீடுகளில் நுளம்பு உற்பத்தியாவதற்கு ஏதுவான பொருட்கள் வீட்டு உரிமையாளர்களின் உதவியுடன் அகற்றப்பட்டன.
டெங்கு நோய்ப் பரவல் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து உயிரிழப்புக்களும் இடம்பெற்றுவரும் நிலையில் மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
No comments