யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டு இருந்த 12 தமிழக கடற்தொழிலாளர்களை, நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
காங்கேசந்துறை கடற்படையினர் கடலில் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே , அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்/
No comments