யாழ்ப்பாணத்தில் 12 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை இட்ட போது , விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சட்ட விரோத மதுபானத்தை பொலிஸார் மீட்டனர்.
அதையடுத்து வீட்டில் இருந்த 53 வயதுடைய நபரை கைது செய்து செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments