நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் புதன்கிழமை வெப்பநிலைஅவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல், மேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்பதால் அது குறித்து அவதானம் செலுத்துமாறு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுப்பது, வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் துணை இயக்குநர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிக வெப்பநிலை காரணமாக தலைவலி, வாந்தி, உடல்வலி, நித்திரை கலக்கம் போன்ற நோய் அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா சுட்டுக்காட்டியுள்ளார்.
No comments