யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ள ஹரிகரனின் இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பிரபலங்கள் குழுவொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக , நடிகர் சிவா , நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், பாடகி சுவேதா மேனன், நகைச்சுவை நடிகர் ரெடின் , விஜய் தொலைக்காட்சி பிரபலங்களான , பாலா , DD என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்க பலரும் விமான நிலையத்தில் கூடி இருந்து மிக பெரிய வரவேற்பை அளித்தனர்.
No comments