யாழ்ப்பாணம் - அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் நேற்றையதினம் வியாழக்கிழமை இரவு மதுபோதையில் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
அதேவேளை பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்டவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி , அவர்களையும் தாக்க முற்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments