தகாத உறவு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிவடைந்ததில் , மூன்று பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இராமநாதபுரம், கல்மடு நகரில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பளை மற்றும் வ வவுனியா பிரதேசங்களை சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 28, 30 மற்றும் 50 வயதுடைய மூன்று பெண்களுமே காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இராமநாதபுரம் பொலிஸார், கிளிநொச்சி மற்றும் வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த 24, 33 மற்றும் 59 வயதுடைய மூவரை கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments