கிளிநொச்சி பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த மகதீஸ் அபிசாகன் (வயது 20) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
தலைக்கவசம் இன்றி வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற வேளை வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளதாக மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments