வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.
குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை முன்னிலைப்படுத்தினர்.
அதனை தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளை அடுத்து 08 பேரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று கட்டளையிட்டது.
அதன்போது கைது செய்யப்பட்ட நபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் , கைது செய்யப்பட்ட நபர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தினார்கள் என தெரிவித்தமையை அடுத்து , கைது செய்யப்பட்டவர்களை சட்ட வைத்தியர் முன்பாக முன்னிலைப்படுத்த பொலிஸாருக்கு மன்று உத்தரவிட்டது.
No comments