இலங்கை விமான படையினரால் ஆள் இல்லாத வேவு விமானங்கள் இலங்கையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு இலங்கையில் அழிந்து வரும் பறவை இனமான "லிஹினியா" (Lihiniya MK 1) என பெயர் சூட்டியுள்ளனர்.
குறித்த விமானங்கள் இலங்கையில் இது வரையில் 07 உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்களுக்கு உரிய உதிரிபாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இலங்கையில் வைத்து குறித்த விமானங்கள் உருவாக்கப்படுகிறது.
இவை ரேடார்களில் அகப்பட்டு கொள்ளாது எனவும் , ஏனையவர்களால் இதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாதவாறான தொழிநுட்ப வசதிகள் கொண்டன.
இவற்றின் அடுத்த பரிமாணங்களாக குண்டுகளை காவி செல்ல கூடியவாறான விமானங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளில் இலங்கை விமான படை ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments