நான்கு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 125 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 935 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1,190 ரூபாவாக இருந்த ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,175 ரூபாவாகும்.
வெள்ளை அரிசி கிலோவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 195 ரூபாவாக பதிவாகியுள்ளது.
வெள்ளை சீனியின் விலை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 272 ரூபாவாக பதிவாகியுள்ளது.
No comments