யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டவுள்ளது.
காங்கேசன்துறை தெற்கு , 235 கிராம சேவையாளர் பிரிவில் 20.3 ஏக்கர் காணிகளும் , வறுத்தலைவிளான் 241 கிராம சேவையாளர் பிரிவில் 23 ஏக்கர் காணிகளும் , மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) 240 கிராம சேவையாளர் பிரிவில் 24 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படவுள்ளது.
விடுவிக்கப்படவுள்ள காணி உரிமையாளர்களுக்கு, அப்பகுதி கிராம சேவையாளர்களால் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
No comments