பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு உயர் மட்ட குழுவினர் யாழ் மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்தனர்.
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகிற நிலையில் குறித்த நிகழ்விலும் பங்கேற்றனர்.
இதன்போது யாழ் மாவட்ட இராணுவ தளபதி, விமானப்படையினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் ஆரம்பமாகிய குறித்த கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதிவரை காலை 10 மணி முதல் இரவு 11 மணிவரை நடைபெறவுள்ளது
No comments