விமான படையின் 73ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சியில் ஒரு அங்கமாக விமான படையினரின் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வுகள் , அணிவகுப்பு காட்சிகள் மற்றும் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமான இக் கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் இடம்பெறும்.
அத்தினங்களில் காலை 10 மணியளவில் பாராசூட் வீரர்களின் சாகசத்துடன் சாகச நிகழ்வுகள் ஆரம்பமாகி மதியம் வரையில் இடம்பெறும்.
அதன் பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டு சாகச நிகழ்வுகள் ஆரம்பமாகி , மோப்ப நாய்களின் சாகசங்களுடன் மாலை 06 மணியளவில் நிறைவு பெறும் , அதனை தொடர்ந்து கலை நிகழ்வுகள் , இசை நிகழ்ச்சி என்பன இரவு 10 மணி வரையில் இடம்பெறும்
No comments