Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வடக்கு, கிழக்கில் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை


வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை மேலும் அதிகரிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சோனெக் இ.சொனெக்  தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நாம் விஜயம் மேற்கொண்டோம். யாழ்ப்பாணத்துக்கும் சென்று இருந்தோம். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியிருந்தோம்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் தாம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக யாழ் மக்கள் தெரிவித்தனர். இளைஞர்- யுவதிகள் வேலைவாய்ப்பு இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதையும் வெளிப்படுத்தினர்.

இவ்வாறான விடயங்களை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம். அதற்கேற்ப பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். வடக்கு கிழக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதோடு,

உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் தெரிவித்துள்ளார்.

No comments