Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வெடுக்குநாறி விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்


வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

 யாழ்ப்பாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட 8 நபர்களின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் அதற்கு முதல் நாள் எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

 குறித்த சந்திப்பில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments