யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி , இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக , கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கூறி 60 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.
மூன்று மாதங்களாக இளைஞனின் பயண ஏற்பாடுகள் நடைபெறாததால் , இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த பெண்ணை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
நீதிமன்றில் தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள இளைஞனிடம் கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்ச ரூபாய் பணத்தினை இளைஞனிடம் குறித்த பெண் மீள் அளித்தார்.
அதனை அடுத்து பெண்ணை 06 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்தது
No comments