Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கடற்புல் தொடர்பான அறிவுக் களஞ்சியப் போட்டி


மாணவர் மத்தியில் கடற்புல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் யா/அராலி சரஷ்வதி இந்துக் கல்லூரியில் தரம் 10 மற்றும்11 இல் நீருயிரின வளத் தொழிநுட்பவியல் பாடம் கற்கும் மாணவர்கள் இடையில் கடற்புல் தொடர்பான அறிவுக் களஞ்சியப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசில்களும், சான்றிதழும் சர்வதேச கடற்புல் தினமாகிய மார்ச் 01 ஆம் திகதி வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வு கங்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் கு.பாலமுருகன் தலைமயில் இடம்பெற்றது.

நிகழ்வில்  பிரதம விருந்தினராக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர் எந்திரி ஜீ.தர்சன் பிரதம விருந்தினராகவும் கலந்து கொண்டார். 

அத்துடன் Clean Ocean Force அமைப்பின் வடமாகாண பிரதிநிதி ம.சசிகரனும், வலிகாமம் கல்வி வலய தொழிநுட்ப பாட ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம் மற்றும் நாடகமும் அரங்கியலும்பாட ஆசிரிய ஆலோசகர் விஜயநாதனும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை அராலி இந்துக்கல்லூரி நீருயிரின வளத் தொழிநுட்ப கழகம் ஒழுங்குபடுத்தி நடாத்தியிருந்தது, Clean Ocean Force எனும் அமைப்பு இதற்கான அனுசரணையையும் வழங்கியிமிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







No comments