யுக்திய நடவடிக்கையின் கீழ் 2 மீன்பிடி படகுகள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் காணிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவை சுமார் 100 மில்லியன் ரூபாக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்கள் எனும் இவை பாதாள உலக பிரமுகர்களுக்கு சொந்தமானவை எனவும் தெரிவிக்கப்படுகினறது.
இந்த சொத்துக்கள் காலி, அம்பலாங்கொடை மற்றும் அஹுங்கல்ல ஆகிய இடங்களில் இடம்பெற்று வரும் ‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்காக 2023 டிசம்பரில் நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments